என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பசு பாதுகாப்பு விவகாரம்
நீங்கள் தேடியது "பசு பாதுகாப்பு விவகாரம்"
தெலுங்கானாவில் பசு பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்காததால் பாஜக எம்எல்ஏ ஒருவர் கட்சியில் இருந்து விலகியிருப்பது சலசலப்பை உருவாக்கி உள்ளது. #CowProtection #BJPMLAResigns #TelanganaBJPMLA
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் கோஷமகால் சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் ராஜா சிங் லோத் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில், பசு பாதுகாப்புக்கு கட்சி தலைமை உரிய ஆதரவு தராததால் கட்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகவும், மாநில பாஜக தலைவர் லட்சுமணனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
‘என்னைப் பொருத்தவரை இந்து தர்மம் மற்றும் பசு பாதுகாப்பு ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பேன். அதன்பிறகுதான் அரசியல். பசு பாதுகாப்பிற்பிற்காக இப்போது பாஜகவில் இருந்து விலகியிருக்கிறேன்.
பசு பாதுகாப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை பிரச்சனை எழுப்பினேன். ஆனால் கட்சி எனக்கு எந்த ஆதரவும் தரவில்லை. இனி நானும், எனது குழுவினரும் (பசு பாதுகாவலர்கள்) தெருவில் இறங்கி போராடுவோம். பசு பாதுகாப்பிற்காக எதையும் செய்வோம்’ என்றும் ராஜா சிங் லோத் கூறியுள்ளார்.
பாஜகவுக்கு மேற்கொண்டு எந்த தொந்தரவும் கொடுக்க விரும்பாததால், ராஜினாமா செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CowProtection #BJPMLAResigns #TelanganaBJPMLA

×

X